யாழ்.பல்கலைக்கழக மாணவிகளுடன் ஆபாசமாக உரையாடல்! கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு தொலைப்பேசியில் அழைப்பெடுத்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆபாசமாக உரையாடியுள்ளார்.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டில் குறித்த நபரின் தொலைபேசி இலக்கத்தினையும் மாணவிகள் வழங்கியுள்ளனர்.
பொலிஸ் முறைப்பாடு
மாணவிகளின் தொலைபேசிகளுக்கு இரவு வேளைகளில் அழைப்பெடுக்கும் நபர் ஆபாசமாக பேசி வந்துள்ளார். அவரின் தொலைபேசி இலக்கத்தில் இருந்து அழைப்பு வராதவாறு தடுத்தாலும் (ப்ளக்) வேறு இலக்கங்களில் இருந்து அழைப்பெடுத்து மாணவிகளை இம்சைக்கு உள்ளாக்கி உளவியல் ரீதியாக பாதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் உரிய முறையில் கவனம் செலுத்தவில்லை என்று மாணவிகள் தரப்பில் ஆதங்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே பொலிஸ் முறைப்பாடு மேற்கொள்ளும் சூழல் உருவானது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதனடிப்படையில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக செய்தி-தீபன்
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri