யாழில் இருந்து சென்ற தொடருந்தில் ஏற்பட்ட பரபரப்பு
காங்கேசன்துறையில் இருந்து காலி நோக்கி பயணித்த மஹவ தொடருந்தில் மோதலில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கசந்துறையிலிருந்து காலி நோக்கிச் செல்லும் தொடருந்தில் ஏறிய மூவர், தொடருந்து இருக்கை தொடர்பில் நபருடன் தகராறு செய்துள்ளனர்.
மேலும் குடிபோதையில் தொடருந்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது புகையிரதத்தில் இருந்த மற்றொரு நபர் அவர்களை தாக்கினார். பின்னர், தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரையும் கைது செய்து மஹவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22, 26, 28 மற்றும் 57 வயதுடைய மஹவ மற்றும் கணேமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam