யாழ். பல்கலைக்கழக மாணவன் விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (21.2.2024) யாழ். நீா்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மானிப்பாய் - வேம்படி பகுதியை சோ்ந்த யாழ்.பல்கலைகழக கலைப்பிாிவில் கல்வி பயிலவுள்ள புதுமுக மாணவனான ரமேஷ் சகீந்தன்(22 வயது) என்ற மாணவனே விபத்தில் உயிாிழந்துள்ளாா்.
சிகிச்சை பலனின்றி உயிாிழப்பு
விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது வீட்டிலிருந்து இன்று (21) அதிகாலை நீா்வேலிக்கு மோட்டாா் சைக்கிளில் பயணித்த போது வீதியின் குறுக்கே பாய்ந்த நாயுடன் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா்.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri