யாழ். பல்கலைகழகத்தின் பொறியியல் மாநாடு
எதிர்வரும் 19 ஆம் திகதி யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் பொறியியல் பீட வளாகத்தில் முதலாவது பொறியியல் மாநாடு நடைபெறவுள்ளது.
இம் மாநாட்டில் ஒன்பது நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டு தங்களது ஆய்வுகளை சமர்பிக்கவுள்ளனர் என பொறியியல் பீட பேராசிரியர் அ.அற்புதராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல பல்கலைகழகங்களிருந்து வருகின்றவர்கள் மற்றும் மாணவர்கள் இதன் மூலம் பயனை பெறக் கூடியதாக இருக்கும்.
இது ஒரு வாய்ப்பாகவும் காணப்படுகிறது. அதாவது தங்களது கண்டுப்பிடிப்புகள் மற்றும் ஆய்வுகளை பகிர்ந்துகொள்ள கூடிய ஒரு களமாக இந்த மாநாடு அமையவுள்ளது.
இதன் மூலம் இலங்கை மற்றும் சர்தேச அபிவிருத்திகளை ஒரு நிலைபேறான அபிவிருத்தியாக கொண்டுச் செல்லக் கூடியதாக இருக்கும் இந்த பொறியியல் மாநாடு பல தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் ஆதரவோடு இடம்பெறுகிறது.
ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரிக்கப்படவுள்ளது
யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீடத்தின் ஆராச்சியாளர்கள் மற்றும் அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா,கனடா, சீனா, கொங்கொங், உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து வருகின்ற ஆய்வாளர்களும் இதில் பங்குபற்றுகின்றார்கள்.
இந்த பொறியியல் ஆய்வு மாநாடு பல சமூக பிரச்சினைகளை பொறியியல் நோக்கோடு ஆய்வு செய்து அவற்றிக்கு தீர்வுகளை காணவுள்ளனர்.
இதன் போது தெரிவு செய்யப்படுகின்ற சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரிக்கப்படவுள்ளது.
இதற்காக பல முன்னணி பல்கலைகழகங்கள், பேராசிரியர்கள் ஆகியோர் உதவி செய்துள்ளனர்” எனவும் தெரிவித்துள்ளார்.
யாழில் பலரை வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா(Video) |
யாழில் தேனீரை 10 ரூபாய்க்கும் இயற்கை முறையிலான மூலிகை உணவுகளை 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யும் உணவகம் (Video) |