யாழ்.பல்கலைக்கழகத்தின் பொதுப்பட்டமளிப்பு விழா! வீதிப்போக்குவரத்து தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொதுப்பட்டமளிப்பு விழாவினை முன்னிட்டு வீதிப்போக்குவரத்தை ஒரு வழிப்பாதையாக மாற்றுவது தொடர்பாக நல்லூர் பிரதேச சபை அறிவித்துள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் யுகராஜா ஜெலீபன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பட்டமளிப்பு விழா 19.07.2023 தொடக்கம் 21.07.2023 வரையான 3 தினங்கள் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், போக்குவரத்து தொடர்பான அசௌகரியங்களை தவிர்க்கும் பொருட்டு காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை திருநெல்வேலி சந்தியிலிருந்து கொக்குவில் சந்தியை நோக்கிய ஆடியபாதம் வீதியின் புகையிரதக்கடவை வரையான பாதை மற்றும் கலட்டிச்சந்தியிலிருந்து இராமநாதன் வீதி பரமேஸ்வராச்சந்தி வரையான பாதை ஆகியன ஒருவழி பாதையாக பேணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
