யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை ஆரம்பம்

Jaffna University of Jaffna
By Theepan Mar 17, 2025 09:49 PM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை 19 திகதி புதன்கிழமை முதல் எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை வரை - நான்கு நாள்கள் பதின்மூன்று அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பொன்று துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில்  நேற்றையதினம்(17) இடம்பெற்றது.

இதன் போது பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் சி. ரகுராம் பட்டமளிப்பு விழா பற்றிய விபரங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

யுத்த குற்றச்சாட்டு இராணுவத்துக்கு தண்டனை வழங்காமையே வைத்தியர் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டமைக்கு காரணம்!

யுத்த குற்றச்சாட்டு இராணுவத்துக்கு தண்டனை வழங்காமையே வைத்தியர் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டமைக்கு காரணம்!

அதன் முழு விபரம் 

வருடந்தம் நடைபெறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு வைபவமானது, பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாக அமைவதுடன், ஒவ்வொரு பட்டதாரியினதும் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாகவும் இடம்பிடிக்கின்றது.

இந்தப் பட்டமளிப்பு விழாவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு பொன் விழா ஆண்டு நிறைவில் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை ஆரம்பம் | Jaffna University Convocation Ceremony

39வது பட்டமளிப்பு விழாவுக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிப்பார்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம், கலைப்பீடம், பொறியியல் பீடம், விவசாய பீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், தொழில்நுட்ப பீடம், இந்துக் கற்கைள் பீடம், சித்த மருத்துவ பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னை நாள் வவுனியா வளாகத்தைச் (தற்போது வவுனியா பல்கலைக்கழகம்) சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞானங்கள் பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் 399 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 686 உள்வாரி மாணவர்களுக்கும், 702 திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 133 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 399 மாணவர்கள் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர்.

கொழும்பு கிரான்பாஸில் துப்பாக்கிச்சூடு

கொழும்பு கிரான்பாஸில் துப்பாக்கிச்சூடு

பட்டமளிப்பு விழா

அவர்களில் கலாநிதிப் பட்டத்தை நான்கு மாணவர்களும், முது மெய்யியல்மாணிப் பட்டத்தை 11 மாணவர்களும், தமிழில் முதுமாணிப்பட்டத்தை 22 மாணவர்களும், சைவசித்தாந்தத்தில் முதுமாணிப்பட்டத்தை மூன்று மாணவர்களும், கிறிஸ்தவக் கற்கைகளில் முதுமாணிப்பட்டத்தை 38 மாணவர்களும், தூய சக்தித் தொழில்நுட்பங்களில் முதுமாணிப் பட்டத்தை ஒரு மாணவரும், கல்வியியலில் முதுமாணிப்பட்டத்தை 176 மாணவர்களும், பொது நிர்வாகத்தில் முதுமாணிப்பட்டத்தை 70 மாணவர்களும், கல்வியில் பட்டப்பின் தகமைச் சான்றிதழை 54 மாணவர்களும், பிராந்தியத் திட்டமிடலில் முதுமாணிப்பட்டத்தை 17 மாணவர்களும், தமிழில் பட்டப்பின் தகமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெறவிருப்பதுடன் வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தை இரண்டு மாணவர்களும் பெறுகின்றனர்.

மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 147 மாணவர்கள் மருத்துவமாணி சத்திரசிகிச்சைமாணிப் பட்டத்தையும், பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 177 மாணவர்கள் பொறியியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், விவசாய பீடத்தைச் சேர்ந்த 110 மாணவர்கள் விவசாயத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 84 மாணவர்கள் பொறியியலில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும், 91 மாணவர்கள் உயிர்முறைமைகளில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும், சித்தமருத்துவ பீடத்தில் இருந்து 60 மாணவர்கள் சித்த மருத்துவ சத்திரசிகிச்சைமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை ஆரம்பம் | Jaffna University Convocation Ceremony

இவர்களுடன், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தில் இருந்து மருந்தகவியல் சிறப்புமாணிப் பட்டத்தை 39 மாணவர்களும், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 52 மாணவர்களும், தாதியியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 38 மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.

அத்துடன், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து சிறப்பு வியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை 267 மாணவர்களும், வியாபார நிர்வாகமாணிப் (பொது) பட்டத்தை 13 மாணவர்களும், சிறப்பு வணிகமாணிப் பட்டத்தை 83 மாணவர்களும், வணிகமாணிப் (பொது) பட்டத்தை மூன்று மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.

இவர்களுடன், கலைப்பீடத்தில் இருந்து சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 276 மாணவர்களும், பொதுக் கலைமாணிப் பட்டத்தை 353 மாணவர்களும், மொழிபெயர்ப்புக் கற்கைகளில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 22 மாணவர்களும், சட்டமாணியில் சிறப்புப் பட்டத்தை 69 மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.

மேலும், சேர். பொன் இராமநாதன் ஆற்றுகைகள், காண்பியக் கலைகள் பீடத்தைச் சேர்ந்த 158 மாணவர்கள் நடனம், இசை மற்றும் சித்திரமும் வடிவமைப்பும் துறைகளில் நுண்கலைமாணிப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.

விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை- சில அறிவிப்புகள் வெளியாகலாம் என டொனால்ட் ட்ரம்ப் உறுதி

விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை- சில அறிவிப்புகள் வெளியாகலாம் என டொனால்ட் ட்ரம்ப் உறுதி

விஞ்ஞானமாணி பட்டம்

மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 36 மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 30 மாணவர்கள் கணனி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 57 மாணவர்கள் சுற்றுச் சூழல் விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமாணிப் பட்டத்தை இரண்டு மாணவர்களும், தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தை 106 மாணவர்களும், பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணி பட்டத்தை 56 மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.

வியாபாரக் கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 57 மாணவர்கள் கணக்கியலும், நிதியியலிலும் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 13 மாணவர்கள் வியாபாரப் பொருளியலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 32 மாணவர்கள் மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 12 மாணவர்கள் சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 34 மாணவர்கள் வியாபார முகாமைத்துவமாணி (பொது)ப் பட்டத்தையும், 67 மாணவர்கள் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், ஒன்பது மாணவர்கள் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணி பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை ஆரம்பம் | Jaffna University Convocation Ceremony

இவர்களுடன், தொழில்நுட்பக் கற்கைகள் பீடத்தில் இருந்து 110 மாணவர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் இளமாணி சிறப்புப் பட்டத்தையும் பெறுகின்றனர்.

பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் தொலைதூரக் கற்கைகள் முறைமை மூலம் பட்டக் கற்கைகளைப் பூர்த்தி செய்த 514 மாணவர்கள் கலைமாணி பட்டத்தையும், 76 மாணவர்கள் சிறப்பு வணிகமாணிப் பட்டத்தையும், 26 மாணவர்கள் வணிகமாணிப்பட்டத்தையும், 86 மாணவர்கள் வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளதுடன், 90 மாணவர்கள் உடற்கல்வியில் உயர் தகமைச் சான்றிதழ்களையும், 37 மாணவர்கள் தொழில்சார் ஆங்கிலத்தில் தகைமைச் சான்றிதழ்களையும், பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் உயர் தகமைச் சான்றிதழை ஒரு மாணவரும், வியாபார முகாமைத்துவத்தில் மூன்று மாணவர்கள் உயர் தகமைச் சான்றிதழ்களையும், வணிகத்தில் தகமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெற இருப்பதுடன், வியாபார முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெறுவது உறுதிப்படுத்தப்படவுள்ளது.

விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை- சில அறிவிப்புகள் வெளியாகலாம் என டொனால்ட் ட்ரம்ப் உறுதி

விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை- சில அறிவிப்புகள் வெளியாகலாம் என டொனால்ட் ட்ரம்ப் உறுதி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

இந்தப் பட்டமளிப்பு விழாவில் சகல பட்டக் கற்கைநெறிகளுக்குமாக 68 தங்கப் பதக்கங்களும், 57 பரிசில்களும், நான்கு புலமைப்பரிசில்களும், வழங்கப்படவுள்ளன.

ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மதிப்புமிக்க பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப்பதக்கங்களை முறையே 2020 ஆம் கல்வியாண்டு பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து கலைப்பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும், 2021 ஆம் கல்வியாண்டுக்குரிய தங்கப்பதக்கத்தை பீடமட்டத்தில் கலைப்பீடத்தில் இருந்து ஒரு மாணவரும், மருத்துவ பீடத்தில் இருந்து ஒரு மாணவரும் பெறுவதுடன், 2022 ஆம் கல்வியாண்டுக்குரிய தங்கப்பதக்கத்தை பீடமட்டத்தில் முகாமைத்துக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து ஒரு மாணவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும் பெறுகின்றனர்.

மேலும், தூய மற்றும் பிரயோக விஞ்ஞானத்தில் சிறந்த செயலாற்றுகைக்கான பேராசிரியர் கந்தையா குணரட்ணம் தங்கப் பதக்கத்தை பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும் பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை ஆரம்பம் | Jaffna University Convocation Ceremony

இந்தப் பட்டமளிப்பு வைபவத்துக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் நிகழ்வுகளாக அமையும் நினைவுப் பேருரைகளான சேர். பொன் இராமநாதன் நினைவுப்பேருரை பங்குனி மாதம் 26ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப்பேருரை பி.ப 4.00 மணிக்கும் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவிருக்கின்றன.

சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தகைசால் பேராசிரியருமான பொ.பாலசுந்தரம்பிள்ளை, “இலங்கை, வடமாகாணத்தில் குடித்தொகை வேறுபாட்டு ஒழுங்கும், இடஞ்சார் பரம்பல் மாற்றங்களும் 1871-2022 (The Population Variations Pattern and Spatial Distributional Changes in the Northern Province of Sri Lanka - 1871-2022)” என்ற தலைப்பிலும், மதிப்புமிகு சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையை கொழும்புப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் வரலாற்றுத்துறைத் தலைவர் கலாநிதி. டர்சி தொறடெனியா, “ பெண்கள் ஆரோக்கியத்தின் முன்னோடி கலாநிதி சிவா சின்னத்தம்பி (Pioneer in Women’s Health Dr.Siva Chinnatamby)” என்ற ஆய்வுத் தலைப்பிலும் நினைவுப் பேருரைகளை நிகழ்த்தவிருக்கின்றனர்.

கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போதே உயிரிழந்த அவுஸ்திரேலிய வீரர்: வெளியான காரணம்

கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போதே உயிரிழந்த அவுஸ்திரேலிய வீரர்: வெளியான காரணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

19 Mar, 2010
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், India, London, United Kingdom

22 Feb, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Stavanger, Norway

15 Mar, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், ஒமந்தை, சிட்னி, Australia

16 Mar, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, கொழும்பு, Toronto, Canada

09 Feb, 2025
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்பழுகாமம் மட்டக்களப்பு, மண்டூர், Mississauga, Canada

28 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், புத்தளம், வவுனியா

18 Mar, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Jaffna, நெடுங்கேணி, கொம்மந்தறை

18 Mar, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், நீர்வேலி தெற்கு

18 Mar, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மானிப்பாய்

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

17 Mar, 2010
மரண அறிவித்தல்

ஊறணி, திருச்சி, India, பரிஸ், France

10 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

14 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வரணி, Nigeria, சிம்பாப்பே, Zimbabwe, Scarborough, Canada

14 Mar, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Guyana, Scarborough, Canada

14 Mar, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

14 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Bochum, Germany, London, United Kingdom, Hayes, United Kingdom, Slough, United Kingdom

13 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, இரத்மலானை

14 Mar, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

15 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம், ஸ்கந்தபுரம், London, United Kingdom

23 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், ஊர்காவற்துறை, பரிஸ், France

04 Mar, 2025
61ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, உடுவில், Scarborough, Canada

12 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada

15 Mar, 2015
மரண அறிவித்தல்

கொழும்பு, Manippay, Urumpirai, Toronto, Canada

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Ivry-sur-Seine, France

11 Mar, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், திருகோணமலை, சிட்னி, Australia

12 Mar, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், நெடுங்கேணி, திருகோணமலை, நெதர்லாந்து, Netherlands, Milton Keynes, United Kingdom

07 Mar, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US