தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராக தேசமாய் திரள்வோம்: யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் பகிரங்க அழைப்பு
தமிழ்ப்பொது வேட்பாளர் எண்ணக்கருவினை ஆதரித்து இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினர் தமிழ் மக்களிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
தமிழ் மக்கள் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான 15 ஆண்டுகளில் தமிழ் மக்கள் தேசமாக பிரதிநிதித்துவப்படுத்துவதிலிருந்து எழுச்சியடைவதிலிருந்தும் சிங்கள - பௌத்த பேரினவாதம் ஏறக்குறைய வெற்றியடைந்துள்ளது.
இந்நிலையில், தமிழ் மக்கள் நாங்கள் சாதிகளாக, மதங்களாக, பிரதேசங்களாக தமிழ் மக்களையும் தமிழ் அரசியற்கட்சிகளையும் உதிரிகளாக்கி எங்களின் கூட்டு - மனவலுவைத் தகர்த்தெறிவதில் சிறிலங்கா அரசின் முகவர்களும் அவர்களது அமைப்புக்களும் கனக்கச்சிதமாக செய்து முடித்துள்ளன.
பொருளாதார நல்லிணக்க மாயைகள்
பொருளாதார நல்லிணக்க மாயைகள் சூழ்ந்த இவ்வாறான சூழ்நிலைகளில் தமிழ் அரசியல் தரப்புக்கள் ஏற்ற உத்தரவாதங்களோ வாக்குறுதிகளோ இன்றி சிங்கள வேட்பாளர்களிடம் தமிழ் மக்களின் அரசியல் வாக்குகளை அடகு வைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதனை பல்கலைக்கழகச் சமூகத்தினர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இவ்வாறானதொரு சூழலில் தமிழ்ப்பொது வேட்பாளர் எண்ணக்கருவினை பலப்படுத்துவதே தமிழ் மக்களிற்கு முன்னால் உள்ள ஒரேயொரு வழியென்றும், 13 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தினுள்ளும், ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பின் உள்ளும் தமிழ் மக்களின் அரசியலை சுருக்குவதில் சிங்கள தலைமைகளிற்கு விலைபோன தமிழ் அரசியல்வாதிகள் முயன்று வருவதையும் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளித்த செயற்பாடுகளினையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழகச் சமூகத்தினர் குறிப்பிட்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
