"நீதிக்கான அணுகல்" செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்துடனான கலந்துரையாடல் நிகழ்வு
நீதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் "நீதிக்கான அணுகல்" செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்துடனான கலந்துரையாடல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இன்று (30) காலை இந் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலின் போது, பல்கலைக்கழக சமூகத்தின் கேள்விகளுக்கு நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் பி.கே. மாயாதுன்ன ஆகியோர் பதிலளித்துள்ளனர்.
இந் நிகழ்வில்,பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், நீதி அமைச்சர் அலி சப்ரி, அங்கஜன் இராமநாதன், செந்தில் தொண்டமான், பி.கே. மாயாதுன்ன, எஸ்.துஷார, க.மகேசன், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பல்கலைக்கழகப் பேரவையின் உறுப்பினர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.