செம்மணி மனித புதைகுழியின் நீதி கோரிய போராட்டம்: யாழ். பல்கலைக்கழகம் ஆதரவு
செம்மணி மனித புதைகுழியின் நீதி கோரிய போராட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது ஆதரவை வழங்குவதாக அதன் தலைவர் லகிர்தர் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்ற போராட்டம் ஒன்றினை தொடர்ந்து, வடக்கு கிழக்கு வலிந்து காணாமாலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு சர்வதேச கண்காணிப்பு மற்றும் நியமங்களுடன் இடம்பெறவேண்டும் என வலியுறுத்தி நாளை காலை 10 மணயளவில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு வழங்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லகிர்தர் பதிலளிக்கையில்,
“நிச்சயமாக எமது ஆதரவுகளை நாம் வழங்குவோம். செம்மணி மனித புதை குழியானது தமிழினத்திற்கு இருக்கூடிய மிகப்பெரிய பிரச்சினையில் இதுவும் ஒன்று யுகத்தில் காணாமலாக்கபட்ட எமது உறவுகளுக்கான நீதி இதுவரை நிலைநாட்டப்படவில்லை.
அனைத்து தரப்புக்களினதும் ஆதரவு
இவ்வாறான சூழலில் செம்மணி மனித புதைகுழியில் இருந்து 7 மனித எச்சங்கள் எலும்பு கூடுகளாக மீட்கப்பட்டுள்ளன.
ஆகவே, நாங்கள் பல்கலைக்கழக மாணவர்களாக சிவில் சமூகமாக இணைந்து இதற்கான போராட்டத்தினை நிச்சயமாக முன்னெடுப்போம் எனவும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்புக்களும் தங்களுடைய ஆதரவுகளை நல்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 8 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
