யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான மாணவர் ஒன்றியம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Sri Lankan Tamils University of Jaffna Sri Lankan Peoples
By Theepan Jan 27, 2025 07:47 AM GMT
Report

யாழ்ப்பாணப் (Jaffna) பல்கலைக்கழக பிரதான மாணவர் ஒன்றியம் தற்போது இயங்குநிலையில் இல்லை என யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்துள்ளார். 

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், தற்போது யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பது இயங்கு நிலையில் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஏனென்றால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்திற்கு செயலாளர் என்று எவரும் இல்லை.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றிய தலைவருடைய கல்வியாண்டு பூர்த்தி செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகவே தலைவர், செயலாளர் இல்லாமல் எவ்வாறு ஒன்றியம் இயங்க முடியும்.

மட்டக்களப்பில் மின்சார தூணுடன் வான் மோதி விபத்து: சாரதி கைது

மட்டக்களப்பில் மின்சார தூணுடன் வான் மோதி விபத்து: சாரதி கைது

செயலாளர் பதவி

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு ஒரு நிறைவேற்று அதிகாரமிக்க தலைவர் மற்றும் செயலாளர் நியமிக்கப்படுமாக இருந்தால் அது பீடங்களினுடைய மாணவர் ஒன்றியங்களில் இருந்து தான் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான மாணவர் ஒன்றியம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் | Jaffna Uni Main Students Union Is Not Operational

தற்போது செயலாளராக தன்னை வெளிப்படுத்தும் நபருடைய நியமனமானது சட்டவிரோதம் என்ற அடிப்படையில் எங்கள் முறைப்பாட்டினை துணைவேந்தருக்கு மாணவர் நலச்சேவை பிரிவுக்கும் முன்வைத்துள்ளோம். முன்னர் இருந்த மாணவர் ஒன்றிய செயலாளர் பதவியை வறிதாகியிருந்தது. அதன் பின்னர் தற்போதுள்ள ஒருவர் நியமிக்கப்பட்டார்.

அதில் எமக்கு ஒரு சந்தேகம் இருந்தது. குறிப்பிட்ட திகதியில் முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினுடைய தலைவருக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டிருந்தது.

எந்தவித கல்வி ரீதியான செயல்பாட்டிலும் அவர் ஈடுபட முடியாது. ஆகவே ஒரு தலைவர் வகுப்பு தடையில் இருந்த நிலையில் எவ்வாறு அந்த பீடம் ஒரு முடிவினை எடுத்து மாணவர் நல சேவை அலுவலகத்திற்கு அனுப்பி இருக்கமுடியும்.

கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் கலைப்பீட மாணவர் ஒன்றிய சிரேஷ்ட பொருளாளர் ஊடாகவும் பீடாதிபதி ஊடாகவும் மாணவர் நல சேவை கிளைக்கு அனுப்பவேண்டும்.

மட்டக்களப்பில் மின்சார தூணுடன் வான் மோதி விபத்து: சாரதி கைது

மட்டக்களப்பில் மின்சார தூணுடன் வான் மோதி விபத்து: சாரதி கைது

கடிதம் அனுப்பி வைப்பு  

ஆனால் அதனை விசாரித்த போது அவ்வாறான கடிதத்தை அனுப்பவில்லை என்றும் நியமனத்தை அனுப்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. தங்கள் விருப்புகளை காட்டுவதற்காக ஒரு சிலருடைய திட்டமிடப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த நிகழ்வு இடம்பெற்றது. அவரது நியமனம் ஒரு சட்டமுறையற்ற நியமனம்.

இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பு சொல்ல வேண்டும் என மூன்று, நான்கு கடிதங்களை அனுப்பி இருந்த போதும் எவ்வித பதிலும் தரப்படவில்லை. செயலாளருடைய கையெழுத்துக்கள் இல்லாத கடிதங்கள் செல்லுபடியற்றது. மாணவர் ஒன்றியங்களைப் பொறுத்தவரை கூட்டங்களை கூட்டுவதற்கான அதிகாரம் செயலாளரிடம் இருக்கின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான மாணவர் ஒன்றியம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் | Jaffna Uni Main Students Union Is Not Operational

செயலாளரின் பதவி வறிதானால் உச்சபட்சமாக அதிகாரம் உள்ள நபர் கூட்டத்தை கூட்ட முடியும். தற்போது நடைபெறுகிற சம்பவத்தின் படி செயலாளரில்லை.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மாணவர் ஒன்றிய தலைவரின் பதவி வறிதாகி இருக்கின்றது. மூன்று நான்கு மாதங்களாக செயலாளரில்லை. கலைப்பீட மாணவர்களை வழிநடத்துகின்ற பொறுப்பு என்னுடையது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை கண்காணிக்கின்ற அதிகாரம் குறித்தவொரு கட்டமைப்பு இருக்கிறது.

இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி களைத்துப் போய்விட்டோம். கலைப்பீடத்திற்கு வர வேண்டிய ஒரு சிறப்புரிமையை கேட்டு அலுத்து போய் விட்டோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான மாணவர் ஒன்றியம் இயங்குநிலையில் இல்லாத நிலையில், அதன் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கை இயக்குபவர்கள் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்" என சுட்டிக்காட்டியுள்ளார். 

தேசிய கல்வி நிறுவகத்திற்கு யாழிலிருந்து இருவர் நியமனம்

தேசிய கல்வி நிறுவகத்திற்கு யாழிலிருந்து இருவர் நியமனம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US