யாழ்.கடற்பரப்பில் தொடர்ச்சியாக கரையொதுங்கும் சடலங்கள்
யாழ்.வடமராட்சி, சுப்பர்மடம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் உருக்குலைந்த நிலையில் இன்று கரையொதுங்கியுள்ளது.
கடந்த ஆறு நாட்களுக்குள் யாழ். குடாநாட்டு கடற்பரப்பில் அடையாளம் தெரியாத ஐந்து ஆண்களின் சடலங்கள் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை பொதுமக்களிடத்தில் பெரும் அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை வடமராட்சி கிழக்கு - மணற்காட்டுப் பகுதியிலும் வடமராட்சி - வல்வெட்டித்துறைப் பகுதியிலும் இரண்டு சடலங்கள் கரையொதுங்கின.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவுப் பகுதியில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணி பகுதியில் செவ்வாய்க்கிழமை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை பிற்பகல் வடமராட்சி - சுப்பர்மடம் கடற்கரையில் இனம்தெரியாத சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri