யாழ். புத்தூர் மருத்துவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் : சேவைகளை இடைநிறுத்த தீர்மானம்
யாழ். புத்தூர் மருத்துவரின் உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து புத்தூர் ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவின் மருத்துவ சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மருத்துவருக்கு குழு ஒன்றினால் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதுடன் அவரது அலுவலகத்துக்கும் சேதம் விளைவித்தமை தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சேவைகள் இடைநிறுத்தம்
கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி புத்தூர் சந்தி சாந்தி நிலையத்தில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு பெரிய சத்தமாக பாடல்கள் இசைக்கப்பட்டுள்ளது.
அதனால் தமது சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதாக மருத்துவர் குறித்த சாந்தி நிலைய ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மருத்துவரின் கருத்தை பொருட்படுத்தாத நபர்கள் தொடர்ச்சியாக பெரிய சத்தமாக பாடல்களை இசைக்கவிட்டுள்ளதுடன் மருத்துவரை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ள போதும் பொலிஸார் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையிலேயே புத்தூர் ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவின் மருத்துவ சேவைகளை இடைநிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண நிர்வாகம்
இதேவேளை மருத்துவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தவேண்டுமெனவும் பணியாற்றும் ஊழியர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண நிர்வாகம் பொலிஸ் உயர்மட்டத்துக்கு அறிவித்ததையடுத்து புத்தூர் ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவின் மருத்துவ சேவைகளை மீள ஆரம்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
