யாழ். பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஆரம்பம் (Photos)
யாழ். பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் பகுதி 1 இன்று (06.10.2022) காலை பல்கலைக்கழக உள்ளக விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகியுள்ளது.
வழங்கப்படவுள்ள பட்டங்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்கள்
இந்த பட்டமளிப்பு விழா 7 ஆம் திகதி மற்றும் 8 ஆம் திகதி வரை தொடர்ந்தும் எட்டு அமர்வுகளாக இடம்பெறும்.
இதேவேளை, மேற்படி பட்டமளிப்பு விழாவில் 185 பட்டப்படிப்பு தகைமை பெற்றவர்களுக்கும், 2046 உள்வாரி மாணவர்களுக்கும், 147 தொலைக்கல்வி மாணவர்களுக்குமாக 2378 பேருக்குப் பட்டங்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

பட்டமளிப்பு விழா
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் சிரேஷ்ட சோ.பத்மநாதன், துணை வேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா ஆகியோர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி வைத்துள்ளனர்.

மேலும் இந்த பட்டமளிப்பு விழாவில் துறைப்பீட பேராசியர்கள், விரிபுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி: கஜிந்தன், ராகேஷ்




அலி கமெனியின் இறுதி ஊர்வலத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் அமெரிக்கா! பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான்
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்..! தொழிற்கட்சியின் தலைமைப் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்
கோட்டாபய விரட்டப்பட்டு 4 வருடங்கள் - ஜனாதிபதி மாளிகையில் இருந்த பெறுமதியான பொருட்களை திருடியது யார்..!
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam