யாழ் ஆலயமொன்றில் நடந்த அநீதி! யானையால் காலினை இழந்த பெண்
கடந்த 07.05.2025 அன்று யாழ்ப்பாணம் தாவடியில் அமைந்துள்ள வட பத்திரகாளி கோவிலின் இரவு நேர திரு மஞ்சத்திருவிழாவின் போது உபயகாரர்களினால் யானை கொண்டுவரப்படிருந்தது.
தொடர்ச்சியான வெடிச் சத்தம் மற்றும் தீப்பந்த விளையாட்டினால் யானை மிரண்டுள்ளது.
இவ்வாறு யானை செல்கையில் இணுவில் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது பிள்ளைகளை யானை தாக்கிவிடும் என்ற அச்சத்தில் அவர்களை இழுத்துவிட்டு அவர் நிலத்தில் விழுந்துள்ளார்.
இதன் போது யானையும் கீழே விழுந்து குறித்த தாயின் முழங்காலுக்கும் பாதத்திற்கும் இடையில் தனது முழங்காலை ஊன்றி எழும்பியதில் அத்தாயின் கால் பகுதி சிதைவடைந்திருந்தாக தெரிவிக்கப்பட்டடிருந்தது.
இந்தநிலையில்,குறித்த பெண்ணின் கால்பகுதி அகற்றப்பட்டுள்ளதாக சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்துள்ளார்.
அவரின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கே இவ்வாறு இடம்பெற்றுள்ளது. முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க....

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 1 நாள் முன்

வலுவான ஆயுதங்களால் ரஷ்யாவை தாக்கலாம்... உக்ரைனுக்கு கட்டுப்பாடுகளை நீக்கிய மேற்கத்திய நாடுகள் News Lankasri
