யாழ். மாவட்டத்தில் 20 சதவீதமானவர்களுக்கு நீரிழிவு நோய் (Photos)
யாழ்ப்பாண மாவட்ட நீரழிவு கழகம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை
ஆகியவற்றின் ஏற்பாட்டில் உலக நீரழிவு தினத்தினை முன்னிட்டு
விழிப்புணர்வூட்டும் நடமாடும் இலவச பரிசோதனை சேவை நடைபெற்றுள்ளது.
இவ் இலவச பரிசோதனை சேவை இன்று (154.11.2023) யாழ். போதனா வைத்தியாலையின் வெளி நோயாளர் சிகிச்சைப்பிரிவில் வைத்தியசாலையின் நீரழிழிவு சிகிச்சைப்பிரிவின் நிபுணர் கலாநிதி R.T.அரவிந்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் யமுனாந்தா கலந்து கொண்டு நடமாடும் இலவச பரிசோதனை சேவையினை ஆரம்பித்து வைத்துள்ளார்.
நீரழிவால் பேரழிவு
நிகழ்வில் கலந்துகொண்ட யாழ். போதனா வைத்தியசாலையின் நீரழிவு சிகிச்சைப்பிரிவின் நிபுணர் கலாநிதி R.T.அரவிந்தன் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் 20 சதவீதமானவர்களுக்கு நீரழிவு தொற்று நோய் காணப்படுகின்றது.
மேலும், கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காலத்தில் இளைஞர்கள் மட்டத்தில் நீரழிவு நோய் அதிகரித்து காணப்பட்டுள்ளது.
இதில் தற்போது 35,000 மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். நீரழிவை முற்றாக குணப்படுத்துவோம். நீரழிவால் பேரழிவு வேண்டாம் என்று குறிப்பிட்டார்.
நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதவிநிலை வைத்தியர்கள், நீரழிவு சிகிச்சைப்பிரிவின் வைத்திய குழாமினார்கள், மருத்துவபீட மாணவர்கள், யாழ்ப்பாண மாவட்ட நீரழிவு கழகத்தின் தலைவர் மைக்கல் டெபோட் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு ஊர்வலம்
இலங்கையில் மொத்த சனத்தொகையில் 15வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (14.11.2023) இடம்பெற்ற நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வளர்ந்தவர்களில் நான்கு பேரில் ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் கு. சுகுணன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் வைத்தியர்கள் தாதியர்கள் சுகாதார உத்தியோகத்தர்கள் பங்கு கொண்ட இப்பேரணி மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிமனையின் முன்ன ஆரம்பமாகி திருமலை வீதியூடாக மகாத்மா காந்தி பூங்காவை அடைந்தது.
மாவட்ட தொற்றா நோய் தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் இ.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு. சுகுணன் உட்பட அரச உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பேரணியின் நிறைவில் மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு உரைகளும் நடைபெற்றன.
செய்தி- குமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |