யாழ். மாநகர மேயர் வேட்பாளராக நடேசபிள்ளை வித்தியாதரனை களமிறக்குகின்றது தமிழரசுக் கட்சி
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனைக் களமிறக்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
ந.வித்தியாதரன், சமூக விடுதலைக்காக, சமூக நீதிக்காக, தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக எழுத்தாயுதம் ஏந்திப் போராடியுள்ளார்.
ந. வித்தியாதரனை களமிறக்குகின்றது தமிழரசுக் கட்சி
தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச மட்டத்திலும் நன்கறியப்பட்டவர். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராகப் பதவி வகித்த காலகட்டத்தில், இவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதன்பின்னர் சிறைத் தண்டனையும் அனுபவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்தம்பித நிலையில் இருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைக்குப் புத்துயிர் கொடுக்க முன்னின்று செயற்பட்டவர் இவர் என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

திருமணம் முடிந்த சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட மணமகன்: உறைந்து போய் நின்ற மணமகள்: வீடியோ News Lankasri
