யாழ்ப்பாணம்-தமிழகத்திற்கு இடையிலான கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பம்
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஸ் நடராஜ் தெரிவித்துள்ளார்.
இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இந்தியத் துணைத் தூதர் ராகேஸ் நடராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக காங்கேசன்துறை - காரைக்கால் இடையே கப்பல் சேவையை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தது.
எனினும் தற்போது காங்கேசன்துறை - நாகப்பட்டினம் என்ற அடிப்படையில் பயணப்பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அலுவலகம் அமைக்கும் பணிகள்
இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் பயணிகள் முனையம், சுங்க அலுவலகம் போன்றவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை வடக்கு மாகாணத்திற்கான தூரம் 110 கிலோமீட்டர்களாகும்.
எனவே நாகப்பட்டினத்தில் இருந்து கப்பலில் சென்றால் வெறும் 4 மணிநேரத்தில் காங்கேசன்துறையை அடைந்துவிடலாம் என கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
