மாணவர்களின் எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் பதவியேற்ற வேலணை பாடசாலை அதிபர்!
யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபர் நியமனம் தொடர்பில் நேற்று (25.07.2023) மாணவர்கள் எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.
இவ் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் புதிய அதிபராக கஸ்ரன் றோய் தனது கடமைகளை இன்று (26.07.2023) நண்பகல் 12.00 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய அதிபர் நியமனம்
கடந்த இரண்டு மாதங்களாக குறித்த கல்லூரியில் அதிபர் இல்லாத போதிலும், கிறிஸ்தவ மதமற்ற அதிபர் வேண்டும் என கோரி பல்வேறு சமூகமட்ட அமைப்பினர், பாடசாலை பழைய மாணவர்கள்,கல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தனர்.இந்த நிலையில் இவ்வாறு புதிய அதிபர் நியமனம் வழங்கப்பட்டது.
தீவகவலய கல்விப் பணிமனையின் அதிகாரிகள், வேலணை மத்திய கல்லூரி உப அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பலரும் இந்த பதவியேற்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 9 மணி நேரம் முன்

சிரிப்பால் மட்டுமே மக்களை கவர்ந்த காமெடி நடிகர் குமரிமுத்து...கல்லறையில் இப்படியா எழுதியிருக்கு? Manithan

வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
