யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் வன்முறைக்குழு அட்டகாசம்! ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியார் கோவில் பகுதியில் இன்றிரவு வன்முறைக்குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாவடி பகுதியைச் சேர்ந்த வன்முறை கும்பலொன்று, இன்றிரவு 7 மணியளவில் முதலிய கோயில் பகுதிக்குள் உள்நுழைந்து அங்கு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதல் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
அத்துடன் வேலிகளின் தகரங்கள் அடித்து பிடுங்கப்பட்டு வீடு ஒன்றின் கதவினையும் குறித்த வன்முறை கும்பல் அடித்து உடைத்துள்ளதுடன், இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது வாள்வெட்டிற்கு இலக்கான குடும்பஸ்தர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸாரும், இராணுவத்தினரும் குறித்த பகுதிக்குச் சென்று தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை கைது செய்துள்ளதுடன், 7 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நீதிமன்றத்தில் கடமையாற்றுபவர் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். அவரது வீட்டில் பல மதுபான போத்தல்களும் காணப்பட்டுள்ளன.
இந்த வன்முறைக்குழு இதற்கு முன்னரும் இவ்வாறு தாக்குதல் நடாத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.



ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri