யாழ் - சித்தங்கேணி சிவன் கோவிலடியில் வாள்வெட்டு!
யாழ்ப்பாணம் -சித்தங்கேணி சிவன் ஆலய முன்றலில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி சிவன் ஆலய வளாகத்தில் இன்று(11 )வைத்து, அந்த ஆலய நிர்வாகத்தில் உள்ள ஒருவருக்கும் வேறு ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த வேறு ஒரு நபர் கோவிலின் நிர்வாகத்தில் உள்ள ஒருவரை வாளால் வெட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரது வாள் கீழே விழுந்ததையடுத்து அந்த வாள் மீட்கப்பட்டு வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வாள் வெட்டினை மேற்கொண்டவர் தின்னவேலியை சேர்ந்தவர் எனவும் கோவில் தகராறு காரணமாகவே வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
