யாழ்.வர்த்தக நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்பு
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வட மாகாண உதவிப் பணிப்பாளரின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் யாழ்.மாவட்டத்தில் பல வர்த்தக நிலையங்களில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கல்வியங்காடு, கோப்பாய், அச்சுவேலி, நீர்வேலி ஆகிய பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் நேற்றைய தினம் (30) சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்குப் பால் மா தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டதுடன், விற்பனைக்கு மறுத்தமை மற்றும் சட்டவிரோதமாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் எரிவாயு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களும் பரிசோதனை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri