யாழ்ப்பாணம் தொடர்பில் சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், ஆசியாவிலேயே மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ள 18 இடங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.
CNN Travel’sஇனினால் மதிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை விபரிக்கும் CNN Travel’s, பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் அழகிய தெற்கு கடற்கரை அல்லது அதன் மத்திய மலை நாட்டிற்குச் செல்வதாக குறிப்பிட்டுள்ளது.
இவை இரண்டும் கொழும்பில் இருந்து இலகுவாக சென்றடைய கூடிய வகையில் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை வரும் இன்ஸ்டாகிராம் பதிவாளர்களுக்கு இந்த இரண்டு இடங்களும் மிகவும் பிடித்தமான இடங்களாக மாறியுள்ளததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டின் வடக்குப் பகுதியானது, சில சமயங்களில் கார் அல்லது பேருந்தில் பயணம் செய்ய சவாலாக உள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தமிழ் பேசும் மக்களின் முதன்மையான தாயகமாகும், மேலும் அங்கு இந்திய மற்றும் டச்சு காலனித்துவ கடந்த காலத்தின் பிரதிபலிப்பை இன்னும் கொண்டுள்ளது. இதன் விளைவாக ஒரு கலாச்சாரம் உள்ளது.
சுற்றுலாப் பயணிகளை கட்டிடக்கலையுடன் தங்கள் பயணங்களை தொடங்குமாறு CNN Travel’s கேட்டுக்கொண்டுள்ளது.
அலங்கரிக்கப்பட்ட, பிரகாசமான தங்க நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் பரந்த வெள்ளை காலனித்துவ கால யாழ்ப்பாண நூலகம் இரண்டும் பார்வையிட கூடிய மிக முக்கிய விடயங்களில் ஒன்றாக உள்ளது.
வாழைப்பழங்கள் மற்றும் மாம்பழங்கள் கறிகள், ஊறுகாய்கள் மற்றும் அரிசி உணவுகளை எடுத்துக்கொள்வதற்கு மலிவான உணவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.