யாழில் விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு
யாழ். பண்டத்தரிப்பு இந்து கல்லூரியினுடைய 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி இன்றைய தினம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
குறித்த விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் மலர்விழி குணபாலன் தலைமையில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கையின் முன்னணி தொழிலதிபரும், IBC தமிழ் ஊடகத்தினுடைய தலைவரும், பண்டத்தரிப்பு இந்து கல்லூரியினுடைய பழைய மாணவருமான கந்தையா பாஸ்கரன் கலந்துகொண்டார்.
மேலும் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வலிகாமா வலய உதவி கல்வி பணிப்பாளரான சு.ஸ்ரீகுமாரன் பங்கேற்றிருந்தார்.
நிகழ்வின் கௌரவ விருந்தினராக சித்த கிராமிய வைத்தியரும் குறித்த பாடசாலையின் பழையமானவருமான சி. சிவசுப்ரமணியம் கலந்துகொண்டார்.
நடைபெற்று முடிந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட கந்தையா பாஸ்கரன் அவர்களினால் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
