யாழ். மேயர் மணிவண்ணன் தலைமையில் விசேட கூட்டம்
யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதி புனரமைப்பு தொடர்பாக மாநகர மேயர் வி.மணிவண்ணன் தலைமையில் மாநகர சபையில் இன்று விசேட கூட்டம் நடைபெற்றது.
இதில், யாழ். மாநகர சபையின் ஆணையாளர், பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, இலங்கை மின்சார சபை, இலங்கை ரெலிகொம் ஆகியவற்றின் பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகளும், ஸ்ரான்லி வீதி புனரமைப்பு செய்யும் ஒப்பந்தக்கார நிறுவனத்தினரும், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஒப்பந்தக்கார நிறுவனத்தினரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், மேற்படி திட்டத்தை வரும் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குள் முடிவுறுத்திக் கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதைக் குறைத்து வேகமாகச் செய்து முடிப்பது எனவும் இணக்கம் காணப்பட்டது.
ஸ்ரான்லி வீதியானது இருபக்கமும் வாகனத்தரிப்பிடம், வாய்க்கால், நடைபாதை,
சுற்று வட்டம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியவாறு புனரமைக்கப்படவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam