யாழ். மாவட்ட வர்த்தகர்களுக்காக இடம்பெற்ற வட் வரி தொடர்பான விசேட கலந்துரையாடல்
யாழ். வர்த்தகர்களுக்கான வட் வரி தொடர்பான விழிப்புணர்வும் ஆரோக்கியமான வியாபார சூழலை உருவாக்குதலும் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் இணைப்பதிகாரி ந.விஜிதரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று(28.02.2024) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆரோக்கியமான வியாபார சூழல்
இந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ்ப்பாண பிராந்திய இறைவரித் திணைக்கள உதவி ஆணையாளர் மு.சிந்துஜா ஆகியோர் கலந்துகொண்டதோடு, ஆரோக்கியமான வியாபார சூழலை உருவாக்குதல் தொடர்பாக கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இக் கலந்துரையாடலில் சதொச நிறுவன முகாமையாளர், காகில்ஸ் நிறுவன முகாமையாளர், பல்நோக்கு கூட்டறவு சங்க முகாமையாளர்கள், வர்த்தகர்கள், வியாபார உரிமையாளர்கள், வியாபார முகவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

