தேர்தல் பிரசாரத்தில் விடுதலைப்புலிகளின் பாடலை பயன்படுத்திய ஆளும் தரப்பினர்..! நாமல் சாடல்

Jaffna Namal Rajapaksa Government Of Sri Lanka Sri Lanka Podujana Peramuna
By Rakesh Jun 05, 2026 09:31 AM GMT
Report

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரங்களின் போது, தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைப் பயன்படுத்திய போதும், பகிர்ந்துகொண்ட போதும் ஏன் அவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்பதை அரசு விளக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பாடகர் ஒருவர் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புடைய பாடலைப் பாடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து, தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

இரட்டை நிலைப்பாடு

"அரசின் இத்தகைய இரட்டை நிலைப்பாடும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான இந்த நாடளாவிய கைதும் கவலையளிக்கின்றன.

தேர்தல் பிரசாரத்தில் விடுதலைப்புலிகளின் பாடலை பயன்படுத்திய ஆளும் தரப்பினர்..! நாமல் சாடல் | Jaffna Singer Arrest Namal Against Goverment

பாடல் ஒன்றில் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பான விடயங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பாடகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இசையும் கலைத்துவ வெளிப்பாடும் இப்போது பயங்கரவாதம் சார்ந்த குற்றங்களாகக் கருதப்படுமானால், அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் இத்தகைய பாடல்களைப் பயன்படுத்திய போதும், பகிர்ந்துகொண்ட போதும் ஏன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படவில்லை என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது அரசியல் நலன்களுக்காக இத்தகைய பாடல்களை சமூக ஊடகங்களில் பகிரங்கமாகப் பகிர்ந்தார் என்று கூறப்படுகின்றது.அப்போது பொலிஸார் எங்கே இருந்தனர்? அப்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எங்கே இருந்தது?

விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது சட்டத்தின் பிரகாரம் தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பாகவே இன்றும் காணப்படுகின்றது. விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கைகளை எவரும் ஊக்குவிப்பதையோ அல்லது வெளிப்படுத்துவதையோ நாங்கள் ஒருபோதும் ஆதரிக்கவில்லை.

அரசியல் நோக்கம்

எனினும், ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், ஓர் இளம் பாடகரும் ஒரே மாதிரியான செயல்களுக்காகக் குற்றம் சாட்டப்படும் போது, ஒருவருக்கு அரசியல் பாதுகாப்புக் கிடைப்பதும், மற்றவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதும் முற்றிலும் தவறானதாகும். அரசியல் நோக்கங்களுக்காகவும் தேவைகளுக்காகவும் சட்டத்தை ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்ய முடியாது.

தேர்தல் பிரசாரத்தில் விடுதலைப்புலிகளின் பாடலை பயன்படுத்திய ஆளும் தரப்பினர்..! நாமல் சாடல் | Jaffna Singer Arrest Namal Against Goverment

அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமும், சாதாரண இளைஞர்களுக்கு பிறிதொரு சட்டமும் இருப்பது ஒரு ஜனநாயக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இத்தகைய செயல்கள் சட்டவிரோதமானவை என்று அரசு நம்பினால், அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் பொறுப்புக்கூறல் என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், இந்த கைது அதிகாரத்தைத் தெரிந்தெடுத்து துஷ்பிரயோகம் செய்யும் ஒரு செயலாகவே பார்க்கப்படும்."  என்று நாமல் ராஜபக்ஷ எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை உலுக்கிய பெரும் சோகம் - முதியோர் இல்லத்தில் தீயில் கருகி பலியான 13 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டை உலுக்கிய பெரும் சோகம் - முதியோர் இல்லத்தில் தீயில் கருகி பலியான 13 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல்

வாகன இறக்குமதியில் எழுந்துள்ள சிக்கல் - விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

வாகன இறக்குமதியில் எழுந்துள்ள சிக்கல் - விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US