யாழ்ப்பாணத்தில் பாணின் விலையில் மாற்றம் இல்லை - வெளியாகியுள்ள அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் பாணின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் பாணின் விலை 10 ரூபாயால் குறைவடைந்தது.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் பாணின் விலை தொடர்பில் நேற்று (2.11.2022) கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
220 முதல் 250 ரூபாய் வரை பாண் விற்பனை
இதன் முடிவில் கருத்து வெளியிட்ட யாழ். மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்க செயலாளர், நாட்டில் 220 முதல் 250 ரூபாய் வரை பாண் விற்பனை செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.
ஆனால், யாழ்ப்பாணத்தில் பாணை 200 ரூபாய்க்கு விற்பனை செய்ய சம்மதித்தோம். எனவே, தற்போதைய முடிவின்படி 10 ரூபாய் விலை குறைப்பை செய்ய முடியாதுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
கோதுமை மா விநியோக நிறுவனங்களான பிறீமா மற்றும் செரண்டிப் ஆகியன மாவின் விலையை
குறைதால் நாமும் பாண் விலையை குறைப்போம் என தெரிவித்துள்ளார்.




