யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் ஏழு பேருக்கு கோவிட் தொற்று உறுதி
யாழ். மாநகர சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடமாடிய 73 நபர்களுக்கு திடீர் அன்டிஜன் பரிசோதனை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இன்று மாலை கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளின் படி 07 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தொற்றுக்கான அறிகுறி அதிகரிக்க வாய்ப்புக்கள் இருக்கலாம் எனச் சுட்டிக்காட்டுகின்றனர்.
யாழ். மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார், இராணுவத்தினர்கள் வீதிக் கண்காணிப்பு நடவடிக்கையின் போதே இவர்களுக்கான அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகள் இன்றி வீடுகளில் இருக்குமாறு சுகாதார பரிசோதகர்களின் வேண்டுகோளினை புறக்கணித்துச் செயற்பட்டதன் காரணமாக இவ்வாறு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.









தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
