யாழ். சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று ஆரம்பம்..!
யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் சனிக்கிழமை நண்பகல் கொடியேற்றத்துடன் கோலாகலமாக அரம்பமாகவுள்ளது.
இதில் விசேட திருவிழாக்களாக 01.09.2025, காலை 9.00 மணிக்கு பூங்காவனத்திருவிழாவும், 02.09.2025, காலை 8.00 கைலையா வாகன உற்சவமும், 05.09.2025, மாலை 6.00 சப்பறத் திருவிழாவும், 06.09.2025, காலை 7.00 தேர் திருவிழாவும், 07.09.2025, காலை 8.00 தீர்த்தத் திருவிழாவும், 07.09.2025, மாலை 6.00 வெண்நீற்று திருவிழாவும் இடம் பெறவுள்ளன.
சந்நிதி முருகன் ஆலய 2025. ம் ஆண்டுக்கான பெருந்திருவிழாவிற்காக வருகைதரவிருக்கும் அடியார்கள் நலன்கருதி உள்ளூராட்சி மன்றத்தினர் சுத்தப்படுத்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதேவளை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் நுளம்புக் கட்டுப்பாடு மற்றும் குடிநீர் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
