யாழில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் திடீர் தனிமைப்படுத்தலில்
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் திடீரென தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 34 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களுடன் தொடர்புடையவர்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஜே - 276 கிராம சேவகர் பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன் பதிவு திருமணம் நடந்துள்ள நிலையில் அதில் பங்கேற்ற ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே அவருடன் தொடர்புடைய 38 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் அடையாளம் காணப்பட்டு சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவருடன் கடமையாற்றும் எட்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.