திரையிடப்பட்ட யாழ். பொது நூலக எரிப்பு தொடர்பான ஆவணப்படம்: விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை
யாழ். (Jaffna) பொது நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பிலான ஆவணப்படத்தினை பொது நூலக கேட்போர் கூடத்தில் திரையிட அனுமதி வழங்கும் போது அரசியல் பேச கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆவணப்படத்தினை நூலக கேட்போர் கூடத்தில் திரையிடுவதற்காக கடந்த 17 வருட காலமாக பல தரப்பினரால் முயற்சிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், முயற்சிகளில் பலன் எதுவும் கிடைத்திருக்கவில்லை.
பதாகைகள்
இந்த நிலையில், யாழ். சிவில் சமூக நிலையம் ஊடாக முன்னெடுக்கப்பட்ட முயற்சியில், ஆவணப்படத்தினை திரையிடுவதற்கு மாநகர சபையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
எனினும், குறித்த நிகழ்வில் அரசியல் எதுவும் பேசக் கூடாது என்ற கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நிகழ்வு ஏற்பாட்டாளர்கள், நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்தில், 'அனுமதிக்கப்படவில்லை, அரசியலை பேசுதல்' என எழுதிய பதாகைகளை காட்சிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |