யாழ்.பல்கலை விவசாய பீடாதிபதி பேராசிரியராக பதவி உயர்வு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சீவரட்ணம் வசந்தரூபா பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இதற்கான ஒப்புதலை பல்கலைக்கழகப் பேரவை இன்று வழங்கியுள்ளது.
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமனங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பித்த கலாநிதி சீவரட்ணம் வசந்தரூபாவின் விண்ணப்பத்தை மதிப்பீடு செய்த, மூதவையால் விதந்துரைக்கப்பட்ட துறைசார் நிபுணர்களின் மதிப்பீட்டு அறிக்கை, நேர்முகத் தேர்வு முடிவுகள் ஆகியன இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அவற்றின் அடிப்படையில், விவசாய பீடத்தின் பீடாதிபதியும், விவசாய இரசாயனவியல்
துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சீவரட்ணம் வசந்தரூபா விவசாய
இரசாயனவியலில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 16 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri