முடிவுக்கு வந்தது யாழ். சிறைக்கைதியின் போராட்டம்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி போராட்டத்தில் ஈடுபட்ட சிறைக்கைதி ஒருவரின் போராட்டமானது இன்றைய தினம் (28.05.2023) முடிவுக்கு வந்துள்ளது.
தன்னை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி, மாத்தறையைச் சேர்ந்த 41 வயதான புஷ்பகுமார என்பவர் நேற்றைய தினம் (27.05.2023) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி
நேற்றைய தினம் (27.05.2023) மதியவேளையில் ஆரம்பித்த குறித்த நபரின் போராட்டமானது இரவு முழுவதும் தொடர்ந்த நிலையில், இன்றைய தினம் மதியம் முடிவுக்கு வந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முடிவுக்கு வந்துள்ள போராட்டத்தையடுத்து, அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

