யாழில் கடத்தலில் ஈடுபட்ட டிப்பரை வெடி வைத்து பிடித்த பொலிஸார்
யாழ்ப்பாணத்தில்(Jaffna) இன்றையதினம்(5) அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றை பொலிஸார் வெடி வைத்து மடக்கிப்பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த உழவு இயந்திரம் குருநகர் பகுதியால் மணல் ஏற்றிச் சென்றவேளை, குருநகர் பகுதியில் உள்ள பொலிஸ் காவலரணில் பணிபுரியும் பொலிஸார் அந்த உழவு இயந்திரத்தை துரத்திச் சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணை
பின்னர் அரியாலை பகுதியில் வைத்து வெடி வைத்து உழவு இயந்திரத்தை மீட்டதுடன், உழவு இயந்திரத்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், உழவு இயந்திரத்துடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம், வெள்ளியை விட இதற்கு தான் மதிப்பு அதிகம்.., கோடீஸ்வரரின் நம்பிக்கை News Lankasri

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Siragadikka Aasai: ஆண் நண்பரை பார்க்க ஹோட்டலுக்கு சென்ற ரோகினி! மனோஜிடம் வசமாக சிக்கிய காட்சி Manithan
