யாழில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் குறித்து பொலிஸ் பொறுப்பதிகாரி வெளியிட்டுள்ள தகவல்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் பொலிஸார் வீடு புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதனால் பெண்ணொருவர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளி வந்தன.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
‘‘நேற்று இரவு ஏழு முப்பது மணியளவில் மருதங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றிற்கு திடீரென உட்புகுந்த பொலிஸார் அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஆண் ஒருவர் மீது தாக்கியதாகவும், ஏன் தாக்குகின்றீர்கள் என கேட்டதற்கு பதில் எதுவும் சொல்லாம் பொலிஸார் தொடர்ச்சியாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் ஆத்திரமடைந்த தரப்பினர் பதிலுக்கு பொலிஸார் மீது கல்லெறி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வேளை பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறும் பாதிக்கப்பட்டோர், துப்பாக்கி சூட்டின் போது காயமடைந்த பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை வழிமறித்த பொலிஸார் நீண்ட நேரத்திற்கு பின்னர் காயமடைந்த பெண்ணை பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டுசெல்ல அனுமதித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் வினவிய போது துப்பாக்கி சூடு ஏதும் தம்மால் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
‘‘குறித்த வீட்டில் சட்டவிரோத மதுபான விற்பனை இடம் பெறுவதாக தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மரத்திற்கு கீழ் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் மீது தாக்கியதாகவும் அதனை தொடர்ந்து பொலிஸாருக்கும் குறித்த வீட்டுக் காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடுகளில் பொலிஸார் அந்த வீட்டுக்காரரை கடுமையாக தாக்கியதாகவும் இதன்போது 19 வயது பெண்ணொருவர் படுகாயம் அடைந்ததாகவும், குறித்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக தயாரான நபர்களையே மருதங்கேணி காவலரனில் தடுத்து நிறுத்தப்பட்டு பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். சம்பவத்தின் போது சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சந்தேகநபரை கிளிநொச்சி நீதிமன்றில் இன்று முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபருக்கு எதிராக ஏற்கனவே சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பான வழக்கு ஒன்று இடம் பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்தி: எரிமலை
முதலாம் இணைப்பு
யாழ். வடமராட்சி பகுதியில் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்படவில்லை என்றும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (09.04.2023)மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்போது, பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் பெண் ஒருவர் படுகாயமடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியைத் தொடர்பு கொண்டு வினவிய போது, அவ்வாறான சம்பவங்கள் எவையும் நடைபெறவில்லை எனக் கூறியுள்ளார்.
முரண்பாடு
மேலும் அவர் கூறுகையில், குறித்த பகுதியில் கசிப்பு விற்பனை நடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் அந்தப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது அப்பகுதி மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆனால் அங்குத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படவும் இல்லை, எவரும் காயம்
அடையவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan
