யாழில் தலைமறைவாக இருந்து இளைஞன் அதிரடியாக கைது
யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தலைமறைவாக இருந்த தாவடியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாள்வெட்டு வன்முறை
அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டு வந்த கும்பலின் முக்கியமான சந்தேக நபராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அண்மையில் மானிப்பாயில் வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியமை, அரியாலை மற்றும் பளையில் வீடுகளுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட நபரை பொலிஸார் தேடி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீவிர விசாரணை
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபரிடமிருந்து 3 வாள்கள், மோட்டார் சைக்கிள் என்பன சான்றுப்பொருள்களாக கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.