யாழில் கடத்தலில் ஈடுப்பட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது
ஒருவரைக் கடத்திச் சென்று அவரிடமிருந்து 8 மில்லியனுக்கும் அதிகமான பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் இன்று (16) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த 27 வயதுடையவர்.
விமான நிலையத்திற்கு வந்தபோது..
பெப்ரவரி 8 ஆம் திகதி யாழ்.ஆரியகுளம் பகுதியில் ஒருவரைக் கடத்தி 8.478 மில்லியன் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர்.

அதன்படி, குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரண்டு ஆண் சந்தேக நபர்களும் இரண்டு பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிப்ரவரி 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடத்தல் சம்பவத்தை திட்டமிட்டதாகக் கருதப்படும் முக்கிய சந்தேக நபர், துபாய்க்குச் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தபோதே, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் இன்று யாழ்ப்பாண பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri