கொட்டும் மழையிலும் போராடும் யாழ். மக்கள் - 36 ஆண்டுகளாக நீடிக்கும் கோரிக்கை!
பலாலி மக்கள் தமது பூர்வீக வாழிடங்களையும் காணிகளையும் விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம், கொட்டும் மழைக்குள் இன்றைய தினம்(25.10.2026) 19 ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள், இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கொட்டும் மழையிலும் போராட்டம்
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில், தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் பலாலி சந்தியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 19ஆவது வாரமாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இலங்கை தமிழ் அகதிகளை மீளக் கொண்டு வருவதாக கனடாவிலுள்ள அமைப்புகள் பணம் வசூலிப்பு..! ஈரோஸ் தலைவர் அதிருப்தி