யாழ். வடமராட்சியில் ஒரு இலட்சம் பனம் விதை நடுகை திட்டம் ஆரம்பம்.!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு பகுதியில் மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு ஒரு இலட்சம் பனம் விதை நடுகை திட்டம் இன்று (11) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க முன்னாள் தலைவர் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க பொது முகாமையாளர் பிரதம விருந்தினாராக கலந்து கொண்டு பனம் விதை நடுகை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
பயன்தரும் மரங்கள்
இந்நிகழ்வில் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க முன்னாள் பொருளாளர் மற்றும் முன்னாள் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்து சங்க நிர்வாகிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதே வேளை எதிர்வரும் தினங்களில் கொட்டோடை கிராமத்தில் 10000 பயன்தரும் மரங்கள் நாட்டப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |