சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட வேப்பமரம் : அதிகாரிகளும் யாழ். ஆதீனமும் மெளனம்
யாழில் (Jaffna) நூற்றாண்டு கடந்த வேப்பமரம் ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்டது தொடர்பில் அதிகாரிகளும் யாழ்ப்பாண ஆதீனமும் மெளனம் காத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் தென்னிந்திய திருச்சபை வளாகத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கன் மிசனரிகள் காலத்தில் சுற்று சூழலை பாதுகாக்கும் நோக்குடன் இந்த பகுதியில் பல்வேறு மரங்கள் நாட்டப்பட்டுள்ளன.
அனுமதியின்றிய செயற்பாடு
இந்நிலையில், அப்பகுதிக்கு பொறுப்பாக உள்ள ஒருவரால் சில மரங்கள் வளாகத்தில் இடையூறாக உள்ளதாக தெரிவித்து கிராம சேவையாளர் ஊடாக அகற்றுவதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, அனுமதியை தவறாக பயன்படுத்தி, அனுமதி வழங்கப்படாத வேம்பு ஒன்று அந்த நபரால் அகற்றப்பட்டுள்ளதுடன், 80,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பதுகின்றது.
கடந்த 30ஆம் திகதியன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் அவதானித்த மற்றுமொரு நபர் புகைப்படங்கள் எடுத்துள்ளதுடன், ஆதீன பொருளாளர் மற்றும் சொத்து பாதுகாப்பு அலுவலரிடம் வினவியுள்ளார்.
ஆயினும், "சம்பவம் தொடர்பில் தமக்கு தெரியாது" என அவர்கள் கூறியதுடன், பேராயரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர்.
ஆவணங்கள்
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர், முறையாக அனுமதி பெறப்பட்டே மரம் வெட்டப்பட்டதாகவும், பேராயரும், செயலாளரும் அனுமதித்ததாகவும் கூறுவதுடன் சட்ட ரீதியான அனுமதிக்கான ஆவணங்களையும் காண்பிக்க மறுத்துள்ளார்.

இந்நிலையில், இவ்விடயம் குறித்து உடுவில் பிரதேச செயலாளர், மரம் வெட்டுவதற்கான அனுமதி கோரப்பட்ட நிலையில் மரங்களை பார்வையிட்ட பின்னர் அனுமதி வழங்கப்பட்டதாகவும், வெட்டப்பட்ட மரத்துக்கு அனுமதி கோரப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தென்னிந்திய திருச்சபை யாழ். ஆதீனத்திற்கு வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு உள்ளிட்ட பகுதியில் பெறுமதியான சொத்துக்கள் உள்ளன.
சட்ட விரோத செயற்பாடு
குறித்த சொத்துக்களை பாதுகாக்க ஒரு உத்தியோகத்தர் நியமிக்கப்படுவதுடன், அசையும் அசையா சொத்துக்கள் தொடர்பில் முன்னெடுக்கும் எந்தவொரு செயற்பாட்டுக்கும் ஆதீன செயற்குழுவின் அனுமதி பெறப்பட வேண்டும் என யாப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையானது இந்த மரங்களை வெட்டும் செயற்பாட்டில் பின்பற்றப்படவில்லை என்பதுடன் இது ஒரு சட்டவிரோத செயற்பாடு என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வெப்பமான கால நிலையில் மரங்களை வெட்டும் செயற்பாடு தொடர்பில் பொறுப்புவாய்ந்த குறித்த பொது ஸ்தாபனம் நடந்தகொண்டிருக்க வேண்டும் என பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
அதேவேளை, சம்பவம் தொடர்பில் அதிகாரிகளும், ஆதீனமும் மௌனம் காப்பதானது எதிர்காலத்தில் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு மேலும் வழியமைத்துக் கொடுக்கும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 18 மணி நேரம் முன்
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam