கச்சதீவினை நோக்கி பிரதேச நிர்வாக அதிகாரிகள் திடீர் விஜயம்
புனித கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 09,10 ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ள வருடாந்த திருவிழா தொடர்பான முன்னேற்பாடுகளுக்கான கள விஜயத்தினை யாழ் மாவட்ட செயலக மற்றும் நெடுந்தீவு பிரதேச நிர்வாக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளர்.
குறித்த கள விஜயமானது இன்று(16.01.2024) எழுவைதீவில் இருந்து கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயம் வரை கடற் வழிமார்க்கமாக இடம்பெற்றுள்ளது.
கடற்படையினரின் பங்களிப்பு
இதன் போது வருடாந்த பெருந் திருவிழாவில் இந்திய, இலங்கை மக்களின் வருகையும், அவர்களுக்கான தங்குமிடவசதிகள், தேவாலயத்தின் துப்பரவுப்பணிகள், மருத்துவசதி உதவிகள், குடிநீர் பெற்றுக்கொடுத்தல், சிற்றுண்டி வசதிகள், படகுசேவை போக்குவரத்து ஒழுங்குகள் இதர பாதுகாப்பு வசதி வாய்ப்புக்கள் பற்றி யாழ்ப்பாண மாவட்ட செயலக, நெடுந்தீவு பிரதேச தலைமை நிர்வாக அதிகரிகளினால் எடுத்துக்கூறப்பட்ட விடயங்களில் இலங்கை கடற்படையினர்கள் அதற்கான முழுமையான பங்களிப்பினை வழங்குவதாக தீவக கடற்படையின் பிரதான கண்காணிப்பாளர் வைல்ட் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
இதில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஸ்ரீமோகனன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் அ.ஜெயகாந்தன், நெடுந்தீவு பங்கு நிலை அருட்சகோதரர். பீ.பீற்றர் ஜெயநேசன் உள்ளிட்ட மூவர் அடங்கிய குழுவினரும், மற்றும் தீவக கடற்படையின் பிரதான கண்காணி ப்பாளர் வைல்ட் பெணாண்டோ மற்றும் கடற்படையினர்கள் கலந்துகொண்டனர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 10 மணி நேரம் முன்

வருங்கால கணவருடன் நெருக்கமான புகைப்படம் வெளியிட்டு திருமண செய்தியை அறிவித்த தான்யா ரவிச்சந்திரன்.. வைரல் போட்டோ Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri

வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri
