யாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக விளையாட்டு விழா
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமும் வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களமும், இணைந்து நடாத்திய பிரதேச மட்ட விளையாட்டு விழா ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த விளையாட்டு விழாவானது நேற்று (23.08.2024) பிற்பகல் 2:00 மணியளவில் மருதங்கேணியில் பிரதேச சபை பொது மைதானத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் ஆரம்பமானது.
வெற்றியாளர்கள்
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றி விளையாட்டுத் தலைவரால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆண்,பெண் இருபாலருக்குமான 100M மற்றும் 4×100 ஓட்டப் போட்டிகள், ஆண்களுக்கான மூன்றாமிடத்திற்கான உதைபந்தாட்ட போட்டி, மென்பந்தாட்ட போட்டி, கயிறு இழுத்தல், உயரம் பாய்தல், நீளம் பாய்தல், எல்லே போன்ற விளையாட்டுக்கள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட செயலாளர் கனகசபாபதி கனகேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் பா.முகுந்தன், 522 ஆவது இராணுவ படையணி தளபதி கேணல் தொடம்வெல, மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி U.M.J.W.K அமரசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் போட்டியில் வெற்றி ஈட்டிய வெற்றியாளர்களுக்கு கேடயங்கள், சான்றிதழ்களை பிரதம, சிறப்பு விருந்தினர்கள் வழங்கி வைத்தனர்.
இவ் விளையாட்டுப் போட்டியில் விளையாட்டுக் கழகங்களின் வீரர்கள், பொதுமக்கள்
என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



