பணிப்புறக்கணிப்பில் குதிக்கவுள்ள யாழ். மாநகர சபையின் சுகாதார பிரிவினர்!
யாழ். மாநகர சபையின் சுகாதார பிரிவினர் நாளை (28) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபை வைத்திய அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், யாழ். மாநகர சபை சுகாதார மாதுகள் சங்கம் ஆகியன இணைந்து, மாநகர சபை ஆணையாளர் மற்றும் கணக்காளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.
இதனால் யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார சேவைகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிகிச்சை நிலையங்கள் நாளை (28) முதல் முடங்கும் அபாயம் காணப்படுகின்றது.
பணிப்புறக்கணிப்பு
யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களின் மேலதிக நேர கொடுப்பனவிற்கு, எங்கேயும் நடைமுறைப்படுத்தப்படாத, எந்த ஒரு நிதிச் சுற்றறிக்கை மூலமும் பிரசுரிக்கப்படாத நடைமுறையினை மாநகர சபை கணக்காளர் பகுதி எதேச்சையாக மேற்கொள்ள முயல்வதால் இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்கள் நாளை (28) முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடடுபடவுள்ளதாக தெரியவந்துள்ளது.
வினைத்திறனற்ற கணக்காளர் (ii) இனால் பாதிக்கப்பட்டு மனவுளைச்சலுக்கு உள்ளான ஊழியர்கள் குறித்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள உள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு முற்று முழுதான பொறுப்பை மாநகர சபை ஆணையாளரும் கணக்காளர் பகுதியினருமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

CSK மேட்ச் பார்க்க வந்தபோது அஜித் அணிந்துவந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?.. இத்தனை லட்சமா? Cineulagam

யார் இருக்கிறார்கள் அங்கே... இந்தியாவில் 35 ஆண்டுகளாக வசிக்கும் பாகிஸ்தானிய பெண்மணி உருக்கம் News Lankasri
