யாழ். வர்த்தக சந்தையில் குழப்பம் : வர்த்தக தொழிற்றுறை மன்றத் தலைவர் காட்டம்
யாழ்ப்பாண வர்த்தக சந்தையை குழப்பும் விதமாக யாழ்.மாநகர சபை தொழிற்பட்டு வருவதாகவும் அது தொடர்பில் ஆளுநருக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் யாழ்ப்பாண வர்த்தக தொழிற்றுறை மன்றத்தின் தலைவர் கே. விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
வர்த்தக சந்தை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (17.01.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“14ஆவது யாழ்ப்பாண வர்த்தக சந்தை எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையில், யாழ். முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இலவச காட்சி கூடங்கள்
மூன்று தினங்களும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்றுறை மன்றத்துடன் இணைந்து, வரையறுக்கப்பட்ட இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் நிறுவனத்தினால் குறித்த வர்த்தக சந்தை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
வட பகுதியில் உள்ள தொழில் முயற்சியாளர்களின் நன்மைக்காக இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்தோம். இம்முறை 14ஆவது தடவையாகவும் நடத்தவுள்ளோம்.
இதன் மூலம் வடக்கு தொழில் முயற்சியாளர்களுக்கு உறுதுணையாக இருந்தோம். இந்த ஆண்டும் 300இற்கும் மேற்பட்ட காட்சி கூடங்களை அமைத்துள்ளோம்.
அத்துடன், இம்முறை, 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை எதிர்பார்க்கிறோம். இந்த கண்காட்சி ஒரு களியாட்ட நிகழ்வாக இருக்காது. இதன் தொழில் முயற்சியாளர்களுக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளோம்.
அதேவேளை, மாவட்ட செயலர் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 10 சிறு முயற்சியாளர்களுக்கும், தொழில் திணைக்களத்தால் தெரிவு செய்யப்பட்ட 10 சிறு முயற்சியாளர்களுக்கும் இலவசமாக காட்சி கூடங்களை வழங்கியுள்ளோம்.
மாநகர சபையின் செயற்பாடுகள்
மேலும், எமது பிரதேசத்திற்கு தேவையானவற்றை இந்த கண்காட்சி ஊடாக அறிமுகப்படுத்தி வருகின்றோம். இம்முறையும் தொழில்நுட்பங்கள், புதுப்பிக்கதக்க சக்திகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தவுள்ளோம்.
குறித்த கண்காட்சிக்காக இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் மூன்று தினங்கள் தங்கியிருக்கின்றனர்.
இதனால், யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதிகள், உணவக தொழிற்றுறை சார்ந்தோருக்கும் நன்மைகள் பயக்கும் என்பதுடன் யாழ்ப்பாணத்திற்கான சுற்றுலாத் துறை சார்ந்த நன்மைகள் கிடைக்கும்.
இவ்வாறான செயற்பாடுகளை குழப்பும் முகமாக யாழ். மாநகர சபை செயற்படுகின்றமை எமக்கு வருத்தமே. மாநகர சபைக்கு வேறு நபர்கள் அழுத்தம் கொடுப்பதாக நம்புகின்றோம்.
இது தொடர்பில் மாவட்ட செயலர் மற்றும் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தி உள்ளோம். ஆளுநரிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கின்றோம்.
அவ்வாறு பதில் கிடைக்காது விடின் கண்காட்சியை வேறு மாவட்டத்திற்கு, மாற்ற வேண்டிய முடிவை நாங்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
