யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் - பலாலி வீதி கந்தர்மடம் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்று(23.12.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த போது அந்த வீதியில் வந்த இரண்டு இளைஞர்கள் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

இதனை அவதானித்த போக்குவரத்து பொலிஸார் இரண்டு இளைஞர்களும் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்றுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதன்போது பொலிஸாரிடமிருந்து தப்பிச்செல்வதற்காக அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் கந்தர்மடம் சந்தியில் பயணித்த காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தப்பியோடிய நிலையில் மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri