யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து : இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம் (Jaffna) பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளிளை செலுத்திய இளைஞன் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (16.04.2024) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீதியின் அருகில் நின்ற கார் வீதியை கடக்க முற்பட்ட வேளை யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞன் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் (Kopay Police) இரு வாகனங்களையும் பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா





ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam

அமெரிக்காவுடன் மோதல்... எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை குறிவைக்கும் சீனா News Lankasri
