கோட்டாகோகமவிலிருந்து யாழ். நூலகத்திற்கு அன்பளிப்பு செய்யப்படவுள்ள புத்தகங்கள் (Video)
கொழும்பு - காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமானது தொடர்ந்து 56வது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டக்களத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்வது மட்டுமல்லாது பொதுமக்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் நூலகங்கள், மருத்துவ வசதிகள் மற்றும் உணவு வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளனர்.
யாழ். நூலகத்திற்கு அன்பளிப்பாக செலுத்தப்படவுள்ள புத்தகங்களை
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு 41 ஆண்டுகள் நிறைவு செய்யப்பட்டு நேற்று முன்தினம் நாட்டின் பல பகுதிகளில்
நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது.
இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் நாளை கோட்டாகோகம பொது நூலக்கத்தில் இருந்து அதிகளவான புத்தகங்களை யாழ். நூலகத்திற்கு அன்பளிப்பாக செலுத்தப்படவுள்ளன.
இவ்வாறு அன்பளிப்பாக செலுத்தப்படவுள்ள புத்தகங்கள் அனைவருக்கும் பயனுள்ள புத்தகங்களாக இருக்கும் என கோட்டாகோகம பொது நூலக்கத்தின் பராமறிப்பாளர்களான இளைஞர்கள் கூறியமை குறிப்பிடத்தக்கது.



