யாழ். போதனா வைத்தியசாலையில் ஒன்றுகூடிய 200ற்கும் மேற்பட்ட நோயாளிகள்!
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று ஒரே இடத்தில் இருநூறிற்கும் மேற்பட்ட நோயாளிகள் ஒன்று கூடியுள்ளனர்.
இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இன்றைய தினம் கிளினிக்கிற்கு வந்த வேளை இவ்வாறு ஒன்றுகூடியுள்ளனர்.
இதில் பலர் முகக்கவசங்களை சரியான முறையில் அணியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மாகாணத்தில் கோவிட் தொற்றில் யாழ். மாவட்டம் தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் வைத்தியசாலை நிர்வாகத்தின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடு கோவிட்வை மேலும் அதிகரிக்க வழிசமைக்கிறது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த நோயாளிகளது மாத்திரைகளை பிரதேச செயலகம் மூலம் கிராம சேவையாளரூடாக
வழங்கினால் இப்படி நோயாளிகள் ஒன்றுகூட வேண்டிய தேவை ஏற்படாது என அவர்கள்
மேலும் தெரிவித்தனர்.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
