யாழ். மனித புதைகுழிகளில் இன்று மீட்கப்பட்ட எலும்புக்கூட்டு தொகுதிகள்
யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றையதினம் 08 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காப்பு போன்ற வளையம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களில் 20 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 2 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இரு பகுதிகள்
இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 18ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டன.
அதன்போது இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் 08 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை, செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 27 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினத்துடன் 67 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மூன்று தினங்களிலும் 20 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசாவின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணி தொல்லியல் பேராசிரியார் ராஜ்சோம தேவா சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள், தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


















ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
