புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் யாழ்.இளைஞன் உயிரிழப்பு
புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் நேற்றையதினம் (13) உயிரிழந்துள்ளார்.
இதன்போது சூரியவெளி - நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த ஜோஜ் மதுசன் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கிளிநொச்சியில் உள்ள தேவாலயம் ஒன்றில் பணி செய்கின்றார். இந்நிலையில் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு பணி செய்ய சென்றுள்ளார்.
உயிரிழப்பு
பின்னர் கடந்த 12ஆம் திகதி வேலை முடித்து திரும்பி வந்து கொண்டிருந்தார். இதன்போது முன்னால் பயணித்த அரச பேருந்து ஒன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்தது.
இதன்போது அவர் குறித்த பேருந்தை முந்துவதற்கு முயற்சித்துள்ளார். இதன்போது எதிர் திசையில் வந்த பட்டா ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
பின்னர் பொலிஸார் அவரை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். பின்னர் அங்கிருந்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் நாட்டின் பாதுகாப்பு 11 மணி நேரம் முன்

சிந்தாமணி செய்த சூழ்ச்சியை சாமர்த்தியமாக முறியடித்த மீனா, நாளைய எபிசோடில்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
